ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பினூடாக அரசியல் இலாபம் தேடுகின்றார் ரணில் – வாசுதேவ குற்றச்சாட்டு

ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பினூடாக அரசியல் இலாபம் தேடுகின்றார் ரணில் – வாசுதேவ குற்றச்சாட்டு

ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்தி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் தான் காரணம் என்பதை காட்டி அதனூடாக அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்த அவர் முயல்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை அமைத்தோம் என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி விரைவான தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை மாகாண சபை தேர்தலை போன்று உள்ளுராட்சி தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

Share This

COMMENTS