விடுதலைப் புலிகளை அழித்தமை தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ள தகவல்

விடுதலைப் புலிகளை அழித்தமை தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தான், அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள, இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எவ்வித உண்மையும் இல்லை
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகளை நான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை.

தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்
இதேநேரம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் கூட காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This

COMMENTS