மக்கள் ஒருபோதும் மஹிந்தவை வீட்டுக்கு செல்ல கோரவில்லை! ரொகான் ரத்வத்த யாழில் தெரிவிப்பு

மக்கள் ஒருபோதும் மஹிந்தவை வீட்டுக்கு செல்ல கோரவில்லை! ரொகான் ரத்வத்த யாழில் தெரிவிப்பு

மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்தையாழில் தெரிவித்தார்,

யாழ்ப்பாண பனை அபிவிருத்தி சபை தலைமை அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மக்களின் எதிர்ப்பினால் சற்று விலகி இருக்கின்றார் தவிர அவரை வீட்ட போகுமாறு மக்கள் பணிக்கவில்லை அவ்வாறு நிலையில் அவர் மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சனையும் கிடையாது ஆனால் பாராளுமன்றத்தில் உரிய முறையில் தெரிவு இடம்பெறும் போது அவர் மீண்டும் பிரதமராக வரக்கூடிய சாத்தியகூறு காணப்படுகிறது மக்கள் அவரை வீட்டுக்கு போகுமாறு ஒருபோதும் கோரவில்லை ஆனால் மக்களின் எதிர்ப்பினால் சற்று விலகி இருக்கின்றார் அவர் பாராளுமன்றத்தின் மூலம் மீண்டும் தெரிவாகக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார். எனினும் தற்போதுள்ள பிரதமருக்கு நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்கி வருகின்றோம் என்றார்,

Share This

COMMENTS