250 கோடி ரூபா மோசடி! கைவிலங்கின்றி அழைத்துச் செல்லப்பட்ட திலினி பிரியமாலி

250 கோடி ரூபா மோசடி! கைவிலங்கின்றி அழைத்துச் செல்லப்பட்ட திலினி பிரியமாலி

உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியில் அலுவலகம் நடத்தி பல கோடி ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் உலக வர்த்தக நிலையம் உட்பட 4 இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட விசேட உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரை விசாரணைக்காக நேற்று காலை உலக வர்த்தக நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் அவர் சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This

COMMENTS