சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசிக்க முயலும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா எச்சரிக்கை!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசிக்க முயலும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா எச்சரிக்கை!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவுஸ்ரேலியா எச்சரித்துள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவுஸ்ரேலியாவின் எல்லை பொலிஸ் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கடற்கொள்ளையர், பயங்கரவாதம் மற்றும் மக்கள் கடத்தல் போன்ற நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டின் நிமித்தமே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஜஸ்டின் ஜோன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This

COMMENTS