உக்ரைனுக்கு போர் பயிற்சி அளிக்கின்றதா ஆஸ்திரேலியா? அதிர்ச்சியில் ரஷ்யா

உக்ரைனுக்கு போர் பயிற்சி அளிக்கின்றதா ஆஸ்திரேலியா? அதிர்ச்சியில் ரஷ்யா

உக்ரைன் நாட்டு ராணுவத்திற்கு ஆஸ்திரேலியா போர் பயிற்சி அளித்து வருவதாக கூறப் படுவது ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது

கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உலக நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவளித்து வருகின்றன என்பதும் ரஷ்யா மீது பொருளாதார தடை உள்பட பல்வேறு தடை விதித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்களுக்கு ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் போர் பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுவதால் ரஷ்யா அதிர்ச்சி அளித்துள்ளது

ஆனால் இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் கூறியபோது உக்ரைன் அதிபர் பயிற்சி அளிக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவுடன் கோரிக்கை வைத்துள்ளார் என்றும் அது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

Share This

COMMENTS