மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதே இலக்கு – தேர்தல்கள் ஆணைக்குழு

மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதே இலக்கு – தேர்தல்கள் ஆணைக்குழு

மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடாக உள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான நடவடிக்கைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுதந்திர ஜனதா சபையின் உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வந்து அதன் தலைவருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உட்பட ஏனைய தேர்தல்களை நடத்துவது தொடர்பான கருத்துக்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Share This

COMMENTS