கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை!

கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை!

நேட்டோ கூட்டு நாடுகளின் மீது தாக்குதல் மேற்கொண்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக ரஷ்யா வான்தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

போரில் தோல்வியைத் தழுவும் அச்சத்தால் ரஷ்யா அணு ஆயுத இலக்குகளைக் குறி வைத்து தாக்குதல்களைத் தொடுத்து வருவதாக நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தங்கள் கூட்டு நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This

COMMENTS