கருணாவின் புதிய படையணி வடக்கு மாகாணத்திற்குள் நுழைந்த காரணம் அம்பலம்

கருணாவின் புதிய படையணி வடக்கு மாகாணத்திற்குள் நுழைந்த காரணம் அம்பலம்

2020ஆம் ஆண்டு பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து விட்டு தற்போது பாட்டாலி சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் 43வது படையணி என்று வைத்திருப்பது போல் இது ஒரு மாயை உருவாக்கி முன்னாள் போராளிகள் மத்தியிலே இழந்த செல்வாக்கை அல்லது தான் மீண்டும் ஊடுருவி வன்னிலே உள்ளே நுழைந்து வடக்கில் போதைப்பொருளை தடுப்போம் என்று கூறுவது வேடிக்கையானது என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் போதைப்பொருள் பாவனையை தடுக்க அம்மான் படையணி என்ற ஒரு படையணி விரைவில் உருவாக்கப்படும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பில் எமது ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“வடக்கில் போதைப்பொருள் பாவனையை செய்வது அரசாங்கம் தான் எனவே அவர் போராட வேண்டியது அரசாங்கத்தை எதிர்த்துதான் என்பதை நாங்கள் ளெிவுப்படுத்த விரும்புகின்றறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

Share This

COMMENTS