ரணிலுக்கு ஆதரவளித்தவர்கள் விதித்த முக்கிய நிபந்தனை

ரணிலுக்கு ஆதரவளித்தவர்கள் விதித்த முக்கிய நிபந்தனை

மக்களின் உண்மையான கருத்து நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்காததால் கூடிய விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கொழும்பில் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு மக்கள் விரும்பும் அரசியல் ஸ்திரத்தன்மையை பெற்றுக் கொள்வதற்கு தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் பாடுபடும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியதாவது:

நாடாளுமன்றம் சிதைக்கப்படுகின்றது
இன்று இந்த நாடாளுமன்றம் சிதைக்கப்படுகின்றது அது மட்டுமன்றி உண்மையான கருத்து நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கவில்லை. 2019, 2020 இல் வாக்களித்த மனநிலை நாடாளுமன்றத்திற்குள்ளும் அதே பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்திற்கு வெளியில் அந்த கருத்து முற்றாக மாறியுள்ளது.

அதனால்தான் கூடிய விரைவில் தேர்தல் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். நாடாளுமன்றத்தில் அதிபருக்கு ஆதரவாக வாக்களிக்க உதவிய 134 பேரின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று தேர்தல் நடத்தக்கூடாது என்பதுதான்.

எனவே தான் மக்களுடன் வெளியே செல்ல காத்திருக்கிறோம். நாட்டுக்கு மக்கள் விரும்பும் அரசியல் ஸ்திரத்தன்மையை பெற்றுக் கொள்வதற்காக தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக நாங்கள் நம்புகின்றோம்.

Share This

COMMENTS