வகுப்பறையில் மது அருந்தி கொண்டே பாடம் நடத்திய ஆசிரியர்: சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை!

வகுப்பறையில் மது அருந்தி கொண்டே பாடம் நடத்திய ஆசிரியர்: சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வகுப்பில் மது அருந்திக்கொண்டே பாடம் நடத்திய ஆசிரியரின் வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக சைலேந்திர சிங் கவுதம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே பீர் பாட்டிலை குடித்துக் கொண்டிருக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து ஆசிரியர் மீது உத்தரபிரதேச காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது. இதனை அடுத்து ஆசிரியர் சைலேந்தர சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது

CATEGORIES
Share This