ஒரு நிமிடத்தில் 100-க்கும் மேற்பட்ட ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த நபர்

ஒரு நிமிடத்தில் 100-க்கும் மேற்பட்ட ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த நபர்

வங்காளதேச நாட்டின் தாக்குர்காவன் பகுதியை சேர்ந்தவர் ரசெல் இஸ்லாம். சிறு வயதில் இருந்தே ஸ்கிப்பிங் செய்வதில் பயிற்சி பெற்ற அவர், பல சாதனைகளை படைத்து உள்ளார். இந்நிலையில், தரையில் அமர்ந்த நிலையில் இருந்தபடி, அதிவிரைவாக ஸ்கிப்பிங் செய்துள்ளார். இதன்படி, ஒரு நிமிடத்திற்குள் 100-க்கும் மேற்பட்ட முறை ஸ்கிப்பிங் செய்துள்ளார். மொத்தம் 117 முறை இதுபோன்று ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்து உள்ளார்.

இந்த வீடியோ நேற்று வெளியான நிலையில், 7.6 லட்சம் பேர் அதனை பார்வையிட்டு உள்ளனர். 60 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இதுபற்றி கின்னஸ் உலக சாதனை வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், நடப்பு ஆண்டு மார்ச் 13-ந்தேதி இந்த சாதனையை அவர் செய்துள்ளார் என தெரிவித்து உள்ளது. எனினும், இந்த வீடியோவை நேற்று வெளியிட்டு உள்ளது.

CATEGORIES
Share This