வடக்கில் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள பத்து அதிகாரிகள்

வடக்கில் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள பத்து அதிகாரிகள்

வடக்கு மாகாணத்தில் தற்போது பணியாற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகள் பலர் இரண்டு ஆண்டுகளுக்குள் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளனர்.

2023 மற்றும் 2024 ஆண்டுகளிலேயே இவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளனர். இரு ஆண்டுகளிலும் மொத்தம் 10 நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளனர்.

இவ்வாறு ஓய்வு பெறும் 10 உத்தியோகத்தர்களில் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் தலா 5 அதிகாரிகள் ஓய்வு நிலைக்குச் செல்லவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஓய்வு பெற்றுச் செல்பவர்களில் 2023 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் விமலநாதன் 2023-05-20 இல் ஓய்வுபெறுவதோடு 2023-06-12இல் வடக்கு மாகாண பேரவைச் செயலாளரான இளமதி சபாலிங்கம் ஓய்வு பெறும் அதேநேரம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரான சரஸ்வதி மோகனாதன் 2023-08.23 அன்று ஓய்வு பெறுகின்றார்.

இதேநேரம் மன்னார் மாவட்ட அரச அதிபர் ஸ்ரான்லி டீமெல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றுச் செல்வதோடு மாகாண பிரதிப் பிரதம திட்டமிடல் பணிப்பாளர் உமாகாந்தன் தற்போது ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளார்.

இதேபோன்று 2024 ஆம் ஆண்டில் தற்போதைய கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் 2024-02-13 அன்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் 2024-03-20 அன்றும், யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் சிவபாதசுந்தரன் 2024-09-18 அன்றும் ஓய்வு பெறுவதோடு தற்போதைய வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளரான திருமதி.ரூபினி வரதலிங்கம் 2024-11-08 அன்றும் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரான திருவாகரன் 2024 டிசம்பர் மாதத்துடனும் ஓய்வு பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS