98 வயதான மூதாட்டி 6-வது தலைமுறை பேரக்குழந்தையை கண்டார்- வைரலாகும் புகைப்படம்

98 வயதான மூதாட்டி 6-வது தலைமுறை பேரக்குழந்தையை கண்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், அமெரிக்காவின் கென்டக்கி பகுதியை சேர்ந்த மேடல் என்ற 98 வயது மூதாட்டிக்கு, இதுவரை 599 பேரப் பிள்ளைகள் உள்ள நிலையில், தற்போது தனது 6-வது தலைமுறை பேத்தியை கையில் ஏந்தியுள்ளார்.
மேடல் மூதாட்டிக்கு மொத்தம் 106 பேரக்குழந்தைகள், 222 கொள்ளுப் பேரக்குழந்தைகள், 234 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 37 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது வைரலாகும் அப்புகைப்படத்தில், 98 வயதான மூதாட்டியுடன் மகள் பிரான்சிஸ் ஸ்னோ, கிரேசி, கொள்ளு பேத்தி ஜாக்குலின் லெட்ஃபோர்ட், கொள்ளு பேத்தி ஜெய்ஸ்லின் வில்சன் மற்றும் குழந்தை ஜாவியா ஆகியோர் உள்ளனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பாட்டிக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.