கருப்புத் திராட்சையில் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றதா?

அனைத்து பழங்களுமே சத்துமிக்கவைதான். அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை. கருப்பு திராட்சையில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடலுக்கு பலவித நன்மைகளைப் பெற்றுத் தருகின்றது. அதுமட்டுமில்லாமல் கருப்பு திராட்சையை ஜாம், ஜூஸ், ஒயின் என்பவற்றை செய்ய பயன்படுத்துவார்கள்.
சரி இனி இந்த கருப்புத் திராட்சையின் ஆரோக்கிய நன்மைகளைக் குறித்து பார்ப்போம்…
செல்களுக்கு சேதம் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், மலச்சிக்கலை தடுக்கின்றது.
பசி உணர்வை கட்டுப்படுத்தி, நன்றாக சாப்பிட்ட உணர்வை நீண்ட நேரம் தக்க வைக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சருமத்தை காற்று மாசுபாடுகளிலிருந்து பாதுகாக்கிறது.
நினைவாற்றலை மேம்படுத்தி, முதுமையில் அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கிறது.
இதய நோய் பாதிப்பை குறைக்கிறது.
பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
தொற்று நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
வீக்கங்களை குறைக்க உதவுகிறது.