உத்தேச மத்திய வங்கிசட்டம் – மத்திய வங்கி ஆளுநரின் கருத்து என்ன?

உத்தேச மத்திய வங்கிசட்டம் – மத்திய வங்கி ஆளுநரின் கருத்து என்ன?

உத்தேச மத்தியவங்கி சட்டம் காரணமாக மக்கள் ஆதரவற்ற கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டியிருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கிக்கு சுயாதீனத்தை வழங்கும் உத்தேச மத்தியவங்கி சட்டம் பொறுப்புக்கூறலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் விலை நெகிழ்;ச்சி தன்மை தொடர்பில் மக்கள் ஆதரவற்ற ஆனால் அவசியமான நடவடிக்கைகளை எடுக்ககூடிய விதத்தில் மத்திய வங்கியை வலுப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியை மக்கள் ஆதரவற்ற ஆனால் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் விதத்தில் வலுப்படுத்துவதே இந்த உத்தேச சட்டத்தின் நோக்கம் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டமூலத்தின் மூலம் மத்திய வங்கி ஆளுநர் சுதந்திரமாக செயற்படமுடியும் எனவும் தெரிவித்துள்ள நந்தலால் வீரசிங்க நிதி அதிகாரிகளின் தலையீடு இன்றி மத்திய வங்கி ஆளுநர் சுயாதீனமாக முடிவுகளை எடுக்க முடியும் அந்த முடிவுகளை ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் விருப்பத்தின் அடிப்படையில் மாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS