நாடாளுமன்றத்தில் அமளிதுமளி! சபைக்கு நடுவே வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றத்தில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சபைக்கு நடுவே வந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல் வேண்டுமென கூச்சலிட்டவாறும், “தேர்தலுக்கு பயந்த அரசாங்கமே தேர்தலை நடத்து” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் முன்னெடுத்ததையடுத்து நாடாளுமன்றில் அமளிதுமளி ஏற்பட்டிருந்தது.
சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் தொடர்ந்ததையடுத்து, சபாநாயகர் சபை நடவடிக்கையை நாளை காலை 9.30 வரை ஒத்திவைத்தார்.
CATEGORIES செய்திகள்